நெல்லையில் நாளை 350 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை 350 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவிப்பு;
நெல்லை மாவட்டத்தில் நாளை 350 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் 90% பேர் முதல் தவணை, 67% பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் சுமார் இரண்டரை லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போட தகுதி பெற்றுள்ளனர் என ஆட்சியர் விஷ்ணு கூறினார்.