வள்ளியூரில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா; நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு வள்ளியூரில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2021-08-25 15:18 GMT

வள்ளியூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பஸ்நிலையத்தில் உள்ள ஸ்ரீ இசக்கி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும், வள்ளியூர் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், நரிக்குறவர்கள் ஆகியோர்களுக்கு அரிசி, சானிடைசர், முகக்கவசம் ஆகிய பொருட்களை மாவட்ட கழக செயலாளர் விஜி வேலாயுதம் வழங்கினார்.

பின்னர் அரசு போக்குவரத்து பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். கலந்தபனை அமைதி இல்லத்தில் சிறுவர்களுக்கு உணவு வள்ளியூர் ஒன்றிய கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டது. மேலும் களக்காடு ஜே.ஜே.நகர், பத்மநேரி ஆகிய பகுதிகளில் உள்ள சிறுவர் இல்லங்கள் முதியோர் இல்லங்களிலும், நாங்குநேரி ஒன்றியம் கல் மாணிக்கபுரம் அன்னை தெரசா முதியோர் இல்லத்திலும் உணவு வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சிகளில் மாநில கேப்டன் மன்ற துணை செயலாளர் விஜயகணேசன், மாவட்ட கழக அவைத் தலைவர் சங்கர், துணைச் செயலாளர்கள் ராணி, ஆல்வின் செயற்குழு உறுப்பினர் வெள்ளத்துரை, ஒன்றியச் செயலாளர்கள் வள்ளியூர் ஜெயசேகர பாண்டியன், களக்காடு சௌந்தர் ராஜ், பணகுடி பேரூர் கழக செயலாளர் ஜான் டேவிட், களக்காடு பேரூர் கழக செயலாளர் பாக்கியராஜ், பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து பாபு மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் சுயம்பு உட்பட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News