புதிய வழித்தடத்தில் இலவச மகளிர் பேருந்து: வள்ளியூரில் சபாநாயகர் துவக்கி வைப்பு
வள்ளியூரில் புதிய வழித்தடத்தில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள புதிய பேரூந்தினை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரிலிருந்து வில்வனம்புதூர் வரையிலான புதிய வழித்தடத்தில் பொதுமக்கள் மற்றும் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள புதிய பேரூந்தினை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பேரூந்து நிலையத்திலிருந்து குமாரபுதுக்குடியிருப்பு, பண்டாரகுளம், ஆனைகுளம், வைத்தியலிங்கபுரம், தங்கயம், வில்வனம்புதூர் வரையிலான புதிய வழித்தடத்தில் பேருந்து வசதியினை சபாநாயகர் அப்பாவு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரூந்துகளில் பெண்கள் கட்டணமின்றி மகளிர் இலவச பயணம் மேற்கொள்ளலாம். இதனால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் சபாநாயகர் அப்பாவுவிற்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் வள்ளியூர் பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புதிய வழிதடத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பேரூந்தில் சபாநாயகர் அப்பாவு மற்றும் திமுக பிரமுகர்கள் அந்த பேருந்தில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்தனர்.