தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை
இடையன்குடியில் தமிழறிஞர் கால்டுவெல் அவர்களது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் தமிழறிஞர் பேராயர் இராபர்ட் கால்டுவெல் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், சேரன்மகாதேவி கோட்டாட்சியர் சிந்து ஆகியோர் அன்னாரின் திருவுருவ சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம் இடையன்குடியில் உள்ள தமிழறிஞர் பேராயர் இராபர்ட் கால்டுவெல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், மாவட்ட ஊராட்சிமன்ற தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ,சேரன்மகாதேவி கோட்டாட்சியர் சிந்து ஆகியோர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக அரசு தமிழறிஞர்கள், மொழிப்போர் தியாகிகள், சுதந்திர போராட்ட வீரர்கள் ஆகியோரை சிறப்பிக்கும் வகையில் அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்களில் அவரது நினைவு இல்லங்களில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணவித்து மரியாதை செலுத்தி அரசு விழாவாக கொண்டாடிவருகிறது அதனடிப்படையில் இன்று திராவிட மொழியை ஒப்பிலக்கணம் ஆய்வு செய்த தமிழறிஞர் கால்டுவெல் அவர்களது பிறந்தநாள் விழா திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
1814-ஆம் ஆண்டு மேமாதம் 7ஆம் தேதி அயர்லாந்து நாட்டில் பேராயர் இராபர்ட் கால்டுவெல் பிறந்தார்.1837-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் நாள் கப்பல் ஏறி நான்கு மாத பயணத்தில் தெலுங்கும், சமஸ்கிருதமும் கற்று, 1839ஆம் ஆண்டு ஜனவரி 8ம் நாள் சென்னை வந்து சேர்ந்தார்.தமிழுக்கு தொண்டாற்றி ஒப்பிலக்கணம் தந்த கால்டுவெல் அவர்கள் "Probagation of the Gospel" என்ற நற்செய்தி பரப்பு சங்கம் சார்பாக வாட்டும் வெயிலிலும், நூற்றுக்கனக்கான மையல்களை கால்நடையாகவே கடந்து 1841ல் இடையன்குடி வந்து சேர்ந்தார்.
1856ல் A Comparative Grammar of the dravidian of south indian family of language.எனப்படும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலினை இயற்றினார்.கிளாஸ்கோ பல்கலைகழகத்தில் மூன்று ஆண்டுகள் இளங்களை பட்டமும், தத்துவம், இலத்தின் மற்றும் எபிரேயம் ஆகிய மொழிகளில் சிறப்பு தேர்ச்சியும் பெற்றார். கிரேக்க மொழி கற்பித்த போராசிரியர் சர்.டேனியல் சான்பார்ட் அவர்களால் மொழி ஆராய்ச்சில் மிகுந்த ஆர்வம் பெற்றார்.1877ம் ஆண்டு கல்கத்தாவில் பேராயராக அருட்பொழிவு பெற்றார். 1881ல் நெல்லை மாவட்ட வரலாற்றை எழுதினார். இவை யாவும் பேராயர் கால்டுவெல் அவர்களின் ஆற்றலுக்கும், பெருமைக்கும், அழியாத சின்னங்களாக திகழ்கின்றது.1891ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் நாள் பேராயர் கால்டுவெல் கொடைக்கானலில் மரணம் அடைந்தார். அவரது உடல் இடையன்குடிக்கு கொண்டு வரப்பட்டு அவரால் கட்டப்பட்ட சர்ச் வழிபாட்டு இல்லத்தில் அடக்கம் செய்யபட்டுள்ளது.
இடையன்குடியில் அவர் வாழ்ந்த இல்லத்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 2011 ஆம் ஆண்டு நினைவு இல்லமாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பேராயர் இராபர்ட் கால்டுவெல் அவர்களின் பிறந்த நாளன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு அன்னாரது மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கு தந்தை ஏ.ஜே.கே.பர்னபாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.ஜெய அருள்பதி, திசையன்விளை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், இடையன்கு ன்குடி ஊராட்சித்தலைவர் ஜெய்கர், ஆகியோர் உள்ளனர்.