திசையன்விளையில் மாவட்ட மகளிரணி சார்பில் அதிமுக பொன்விழா கொண்டாட்டம்

திசையன்விளையில் அதிமுக 50வது ஆண்டு பொன் விழா, மாவட்ட மகளிரணி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.;

Update: 2021-10-17 10:46 GMT

திசையன்விளையில் மாவட்ட மகளிரணி சார்பில் அதிமுக பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 50 ஆவது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு திசையன்விளையில் வைத்து திருநெல்வேலி மாவட்ட மகளிரணி செயலாளர்  ஜான்சிராணி ஏற்பாட்டில், கழக அமைப்பு செயலாளர் சீனிவாசன் தலைமையில் கழக கொடி ஏற்றி, இனிப்புகள் மற்றும்  நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் நாராயண பெருமாள், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் KPK.செல்வராஜ், உவரி பஞ்சாயத்து தலைவர் ராஜன், மகாதேவன், பஞ்சாயத்து தலைவர் பிரேம் சிங், உவரி ரமேஷ், வழக்கறிஞர் ஜேம்ஸ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் AM.கண்ணன், பனை வெல்ல கூட்டுறவு சங்க தலைவர் தர்மசீலன், கவுன்சிலர் பிரதீஸ் குமார், சுப்பையா, கூட்டுறவு சங்க இயக்குனர் அல்அமீன் பாய், நகர மகளிரணி முத்துமணி, ராணி, கார்த்தீஸ்வரி, செல்வரசி, நாமக்கனி மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News