நெல்லையில் விஜயதசமியையாெட்டி ஜெயேந்திர சுவாமிகள் பள்ளியில் வித்யாரம்பம்

நெல்லையில் விஜயதசமியை முன்னிட்டு பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி. இதில் குழந்தைகளுக்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Update: 2021-10-15 12:36 GMT

நெல்லை மகாராஜாநகரில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நடைபெற்றது.

நெல்லை பாளையங்கோட்டை மகாராஜாநகரில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நடைபெற்றது. இதில் ஏராளமான குழந்தைகள் ஆர்வத்துடன் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சரஸ்வதி பூஜைக்கு அடுத்த நாள் விஜயதசமி முன்னிட்டு 3 வயது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இந்நிலையில் தமிழக அரசு நேற்று பிறப்பித்த தளர்வில் எல்கேஜி, யுகேஜி பள்ளிகளை நவம்பர் 1 ம் தேதி முதல் திறக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டது.

இதனையடுத்து இன்று விஜயதசமியை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டை மகராஜநகரில் உள்ள ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 3 வயது குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நடைபெற்றது. பள்ளிக்கு பெற்றோர்களுடன் வந்த குழந்தைகளை பள்ளி சார்பில் குழந்தைக்கு மாலை அணிவித்து சந்தனம், குங்குமம் இட்டு, குடை வைத்து அவர்களை அழைத்து வந்து அரிசியில் 'அ' எழுதச் சொல்லி கற்றுக் கொடுத்தனர். இதில் 80க்கும் மேற்பட்ட குழந்தைகளை சேர்ப்பதற்காக பெற்றோர்கள் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஜெயேந்திர சுவாமிகள் பள்ளியில் குழந்தைகளுக்காக என்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  ஜெயேந்திரா பள்ளி குழுமங்களின் இயக்குனர் ஜெயேந்திரன் V.மணி பள்ளியின் முதல்வர் ஜெயந்தி ஜெயந்திரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்களும் கலந்து கொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

Tags:    

Similar News