நான்குநேரியில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.
முன்கள சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா கால சிறப்பு ஊதியத்தை வழங்குதல் உள்பட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது
நான்குநேரியில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் 15 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
நெல்லை மாவட்டம், நான்குநேரியில் யூனியன் அலுவலகத்தில், ஊராட்சி செயலாளர்கள் சங்க திருநெல்வேலி மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி செயலர்கள் மற்றும் மேல்நிலை தொட்டி இயக்குனர்கள் ஊதியத்தை உயர்த்துதல், முன்களசுகாதார பணியாளர்களுக்கு கொரோனா கால சிறப்பு ஊதியத்தை வழங்குதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊழியர்கள் கோஷமிட்டனர். இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.