நாங்குனேரி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக பிடித்தது

திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக பிடித்துள்ளது.

Update: 2021-10-12 23:38 GMT

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி ஊராட்சி ஒன்றியத்தில் 16 வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதிவிகள் உள்ளது. இதில் அதிகாலை 5 மணி நிலவரப்படி 16-வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான முடிவுகளில் 15-வார்டு ஒன்றிய கவுன்சிலர்களின் முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி பார்க்கும்போது திமுக ஏழு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் மூன்று இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர். 12வது வார்டுக்கான தேர்வு முடிவு இதுவரை வெளியிடப்படவில்லை.

1-வது வார்டு இசக்கி பாண்டி, 4வது வார்டு மீனா, 7வது வார்டு ஆரோக்கிய எட்வின், 9வது வார்டு சௌமியா ராகா, 13வது வார்டு செல்வ பிரேமா, 15வது வார்டு அகஸ்டின் கீத ராஜ், 16வது வார்டு பிரேமா எபினேசர் ஆகிய திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

3வது வார்டு சங்கரலிங்கம், 5-வார்டு செந்தூர் பாண்டியன், எட்டாவது வார்டு லட்சுமி, 10வது வார்டு கிரிஸ்டி, 14வது வார்டு செல்வி ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்

இரண்டாவது வார்டில் ஸ்டீபன் ஜோசப் ராஜ், 6வது வார்டில் முத்துலட்சுமி, 11 வது வார்டில் முருகேசன் ஆகிய சுயேட்சை வேட்பாளர்கள் மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இருந்தபோதிலும் நாங்குனேரி ஊராட்சி ஒன்றியம் திமுக வசமாகிறது.

Tags:    

Similar News