நெல்லை மாநகராட்சி- 4 நாட்களில் 450 டன் காய்கறிகள் விற்பனை-ஆணையர் தகவல்.
திருநெல்வேலி மாநகராட்சி-காய்கறி வாகனங்கள் மூலம் 4 நாட்களில 450 டன் விற்பனை நடைபெற்றுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தகவல்.;
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 339 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் இதுவரை 450 டன் காய்கறிகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காய்ச்சலை முற்றிலும் தடுப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்ற சூழலில் 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலான காலத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கினை அறிவித்தார் இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் வசதிக்காகவும் சமூக விதிகளை பின்பற்றும் விதமாகவும் மாநகரின் அனைத்து பகுதிகளிலும் நடமாடும் காய்கறி விற்பனை சேவை வாகனங்கள் மூலமாக செய்திட வேண்டும் என உத்தரவிட்டார்,
அதனைப் பின்பற்றும் விதமாக கடந்த 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை அன்றாடம் அத்தியாவசிய தேவைப்படும் காய்கறி பொருட்கள் வீடு தேடி வந்து விற்பனை செய்திடும் பொருட்டு மாநகராட்சி சார்பில் பாளையங்கோட்டை மண்டலத்தில் 122 நடமாடும் காய்கறி விற்பனை சேவை வாகனங்களும் மேலப்பாளையம் மண்டலத்தில் 120 நடமாடும் காய்கறி விற்பனை சேவை வாகனங்களும் திருநெல்வேலி மண்டலத்தில் 57 நடமாடும் காய்கறி விற்பனை சேவை வாகனங்களும் தஞ்சை மண்டலத்தில் 40 நடமாடும் காய்களை விற்பனை சேவை வாகனங்களும் என மொத்தம் 339 வாகனங்கள் மூலமாக காய்கறி விற்பனை சேவை நடைபெற்று வருகிறது
இதுவரை 450 டன் அளவிற்கு காய்கறி விற்பனை செய்யப்பட்டுள்ளது மேலும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் தள்ளு வண்டிகள் செல்லமுடியாத குறுகலான சந்து பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனையில் கூடுதல் வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து மாநகராட்சியின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்கள் நடமாடும் காய்கறி விற்பனை சேவை வாகனங்களை அவ்வப்போது கண்காணித்து வருவதுடன் வேளாண்மை துறை மற்றும் உழவர் உற்பத்தி குழு மூலம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் காய்கறிகள் விற்க்கப்படுகின்றனவா என்பதையும் கண்காணிக்கப்பட்டு வந்தது.
என திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.