திருச்சி அருகே கள்ளக்காதலி சந்திக்க வராததால், வாலிபர் வெறிச் செயல்

திருச்சி அருகே கள்ளக்காதலி சந்திக்க வராததால் வாலிபர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டினார், பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.;

Update: 2021-07-29 16:02 GMT

கள்ளக்காதல் ( பைல் படம்)

.திருவெறும்பூர் அருகே குண்டூர் ஊராட்சியில் தாய் மகள் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு ஓட முயன்ற கொத்தனாரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் இதுபற்றிய விவரம் வருமாறு

திருவெறும்பூர் அடுத்தது குண்டுர் ஊராட்சி இங்கு உள்ள திரு வளர்ச்சி பட்டி கீழத் தெருவில் வசிப்பவர் மதியழகன் இவரது மனைவி சரோஜா(42)மகள்கள் ஜனனி( 19) இவர் அண்ணா பல்கலைகழகத்தில் படித்து வருகிறார், பானுமதி வயது (22) தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார் மகன் கோகுல் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

மதியழகன் இன்று காலை 5 மணி அளவில் அருகிலுள்ள மொராய் சிட்டிக்கு தோட்ட வேலைக்கு சென்றுவிட்டார்.வீட்டு மாடியில் மகன் கோகுல் படுத்திருந்தான் வீட்டிற்குள் மனைவி சரோஜா மகள்கள் பானுமதி மற்றும் ஜனனி ஆகியோர் இருந்துள்ளனர்

அப்பொழுது உறையூர் ராமலிங்கம் நகர் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரின் மகன் சதீஷ் வயது 39 கொத்தனார் வேலை செய்பவர் அங்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

கொத்தனார் சதீஷ் மதியழகன் வீட்டை கட்ட வரும்பொழுது அவரது மனைவி சரோஜாவிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது கடந்த ஓராண்டாக இருவரும் பழகி வந்த இந்நிலையில் தற்பொழுது சரோஜா சதீஷிடம் தொடர்பை துண்டித்து உள்ளார்

இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ் இன்று காலை அரிவாளுடன் சரோஜாவின் வீட்டிற்கு வந்து சரோஜாவிடம் வாய்த்தகராறு செய்துள்ளார் சரோஜாவும் பதிலுக்கு சண்டை போட்டுள்ளார் ஆத்திரமடைந்த சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரோஜாவின் தலையில் வெட்டி விட்டு தப்ப முயன்றார்

அருகில் இருந்த ஜனனி இதனை தடுக்க முயற்சித்த பொழுது ஜனனி கையில் வெட்டிவிட்டு சதீஷ் தப்ப முயற்சித்து வீட்டை விட்டு வெளியே வரும்பொழுது ஊர்மக்கள் ஒன்றுகூடி சதீஷ் பிடித்து நவல்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

தலையில் பலத்த காயமடைந்த சரோஜா கையில் பலத்த காயமடைந்த ஜனனி ஆகிய இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் இச்சம்பவம் குண்டூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News