திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பியாக பி.ஏ.மூர்த்தி நியமனம்
திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பியாக பி.ஏ. மூர்த்தி நியமனம் செய்யப்பட்டார்.;
திருச்சி மாவட்ட எஸ்பியாக இருந்த மயில்வாகனன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சேலம் துணை கமிஷனராக இருந்த பிஏ.மூர்த்தி திருச்சி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதே போல திருச்சி மாவட்ட சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, திருவண்ணாமலை எஸ்பியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.திருச்சி ரெயில்வே எஸ்பியாக இருந்த செந்தில்குமார் சிவகங்கை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.