தேசிய கைத்தறி தின சிறப்பு விற்பனை கண்காட்சி: திருச்சி ஆட்சியர் தொடக்கம்
இதில் 15 க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பங்கேற்கின்றன. 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.;
திருச்சியில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு விற்பனை கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் கைத்தறி சிறப்பு விற்பனை கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தொடக்கிவைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: வருகிற 13-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த சிறப்பு கண்காட்சி தமிழகத்தில் ஜவுளித் துறையில் புகழ்பெற்ற திருச்சி மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி சேலைகள் காட்டன் சேலைகள் மற்றும் கருவிகள் கொண்டு வகைகள் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.
இதில், 15-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் கலந்துகொள்கிறார் இந்த ஜவுளி ரகங்களின் விற்பனைக்கு தமிழக அரசால் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றார் ஆட்சியர்