புள்ளம்பாடி பிரைடு லயன்ஸ் சங்கத்தின் முப்பெரும் விழா

புள்ளம்பாடி பிரைடு லயன்ஸ் சங்கத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா, புத்தாண்டு விழா, பொங்கல் விழா ஆகிய 3 விழாக்கள் மும்பெரும் விழாவாக நடைபெற்றது.

Update: 2021-12-22 13:17 GMT

புள்ளம்பாடி பிரைடு லயன்ஸ் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற முப்பெரும் விழா நினைவாக மரக்கன்றுகளை முன்னாள் ஆளுநர்கள் முகம்மது ரபி, பிரேம், மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் இமயவரம்பன், மண்டல தலைவர் டாக்டர் பார்க்கவன் பச்சமுத்து, வட்டார தலைவர் பிரவு, சங்க தலைவர் செல்வராஜ் ஆகியோர் நட்டனர்.

மாவட்டம் 324F. மண்டலம் 5ன், வட்டாரம் 5ஏ புள்ளம்பாடி பிரைடு லையன்ஸ் சங்கத்தின் முப்பெரும் விழா பாரி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.

விழாவில் இயேசு கிறிஸ்து பிறப்பு நடகமாக பள்ளி மாணவர்களால் நடத்தப்பட்டது. சகாய மாதா ஆலயத்தின் பாதர் அல்போன்ஸ், முன்னாள் மாவட்ட கவர்னர் பிஎம்ஜெஎப் லைன் முகம்மது ரவி, மண்டல தலைவர் எம்ஜெஎப் லைன் டாக்டர் பார்க்கவன் பச்சமுத்து ஆகியோர் இயேசு கிறிஸ்து பிறந்த நாள் விழா கேக் வெட்டினர்.

மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் பிஎம்ஜெஎப் லைன் இயமவரம்பன், முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் பிஎம்ஜெஎப் லைன் முகம்மது ரபி, பிஎம்ஜெஎப் லைன் பிரேம், மண்டல தலைவர் எம்ஜெஎப் லைன் டாக்டர் பார்க்கவன் பச்சமுத்து, வட்டார தலைவர் இன்ஸினியர் லைன் பிரபு, பிரைடு லைன் சங்க தலைவர் செல்வராஜ் ஆகியோர் பள்ளி வளாகத்தில் மும்பெரும் விழா நினைவாக மரக்கன்றுகளை நட்டனர்.


பள்ளி முதல்வர் மகேஷ்வரி மற்றும் ஆசிரியர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கினர். புத்தாண்டு விழாவிற்கான கேக்கை மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் பிஎம்ஜெஎப் இமயவரம்பன், எம்ஜெஎப் லைன் டாக்டர் பார்க்கவன் பச்சமுத்து ஆகியோர் வெட்டினர்.

விழாவில் முன்னாள் ஆளுநர் பிஎம்ஜெஎப் லைன் முகம்மது ரபி கிறிஸ்துமஸ் விழாவிற்கு தலைமை வகித்து பேசியதாது :

கல்வி மற்றும் மருத்துவம் அனைவருக்கும் கிடைக்க செய்தவர்கள் கிறிஸ்துவர்கள், ஒரு மனிதன் பிறந்த ஆண்டினை கிமு, கிபி என்று உலகமே கொண்டாடுகிறது என்றால் அது அவர்களின் சேவையை காட்டுகிறது. தொண்டுக்கு அன்னை தெரசாவை நாம் மறக்க முடியாது. கிறிஸ்துவம் சேவை செய் என்றே கூறுகிறது. இந்த நல்ல நாளில் சேவையின் மகத்துவத்தை புரிந்து கொண்டு நாம் அனைவரும் சேவை மனப்பான்மையோடு வாழ வேண்டும் என்று கூறினார்


.பொங்கல் விழாவிற்கு தலைமை வகித்த குறித்து முன்னாள் ஆளுநர் பிரேம் பேசியதாவது.

இயற்கைக்கு நன்றி கூறும் திருவிழாவை கொண்டாடுவது தமிழர்கள்தான், உலகத்திற்கு எடுத்துரைத்து வருவதும் தமிழர்கள்தான். இந்த பெங்கல் விழா என்பது பயிர்கள் வளர்வதற்கு உதவி செய்த சூரியனுக்கு நன்றி சொல்லும் விதமாக சூரிய பொங்கல், நிலத்தில் உழுவதற்கு உதவி செய்த கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக மாட்டுப் பொங்கல், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் கண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கு கொண்டாடும் பொங்கல், காணும் பொங்கல், முதல் நாள் பொங்கள் என்பது போகிப் பொங்கல் இதில் நம் மனதில் உள்ள அழுக்குகளை எரித்து விட்டு, மனதை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என கொண்டாடுவது போகிப் பொங்கல் என மாணவர்களுக்கு எளிதாக புரியும் படி எடுத்துக் கூறினார்.

புத்தாண்டு விழாவிற்கு தலைமை வகித்த மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் இமயவரம்பன் பேசியதாவது :

வாழ்வில் எப்படி வெற்றியடை வேண்டும், அதன் வழி முறை என்ன, நமது பயணம் எதை நோக்கி இருக்க வேண்டும். விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பு ஆகியற்றின் பெருமைகளை எடுத்து கூறும் வகையில் குட்டிக் கதையை மாணவ, மாணவிகளுக்கு கூறினார்.

விழாவில் வாழ்த்துறை வழங்கிய மண்டல தலைவர் எம்ஜெஎப் லைன் டாக்டர் பார்க்கவன் பச்சமுத்து பச்சமுத்து பேசியதாவது :

மண்டலம் 5விற்கு 4 ஆண்டுகளே ஆன நிலையிலும் முதலவதாக மண்டல மாநாடு நடத்த வாய்ப்பளித்த மாவட்ட ஆளுநர் எம்ஜெஎப் லைன் சௌமா.ராஜரெத்தினம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மண்டல மாநாடு சிறப்பாக வெற்றியடைய உதவிய புள்ளம்பாடி பிரைடு லைன்ஸ் சங்கத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது மனைவி டாக்டர் அருணா பச்சமுத்து மக்கள் சேவையில் மகத்தான இடம் பிடித்தவர் அவர் இதுவரை11, 267 மகப்பேறு பிரசவம் பார்த்துள்ளார். தாயைும், சேயையும் காப்பற்றி தந்துள்ளார். நான் இதுவரை 6000 விஷம் சாப்பிட்ட நோயாகளிகளை காப்பாற்றியுள்ளேன். இதனை மருத்துவர்களாக நாங்கள் செய்து வருகிறோம். லயன்ஸ் சங்கத்தின் மூலம் மேலும் சேவைகளை செய்வோம், பள்ளி முதல்வர் மகேஷ்வரியின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாக தெரிவித்தார்.


முன்னாள் ஆளுநர் பிரேம் பொங்கல் விழாவை சிறப்பு பூஜை செய்து பொங்கல் விழாவை நடத்தினார். அப்போது அவர் அனைவருக்கும் புரியும் வண்ணம் தமிழ் மொழியிலேயே அர்த்தங்களை கூறி பூஜை செய்தார். பின்னர் பசு மாட்டிற்கு முதல் பொங்கலை கொடுத்தார்.

பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோலப்போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவரும் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

வட்டார தலைவர் இன்ஜினியர் என் பிரபு வாழ்த்தி பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளை புள்ளம்பாடி பிரைடு லன்ஸ் சங்கத்தின் தலைவர் செல்வராஜ், செயலாளர் முருகன், பொருளாளர் பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News