மணப்பாறை பகுதியில் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு
மணப்பாறை பகுதியில் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வயைிட்டு ஆய்வு செய்தார்.;
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார்.
பின்னர், மணப்பாறை பேருந்துநிலையம் அருகே நடமாடும் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை நடமாடும் வாகனத்தை கொடி அசைத்து தொடங்கிவைத்து மக்கள் குறைகளைகேட்டார்.
மேலும் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா தொற்றில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டி துப்புரவு பணியாளர்களுக்கு கவச உடைகள் வழங்கினார். அதேபோல் மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு அங்கே சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டு பின்னர் மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மாத்திரைகள் இருப்பில் உள்ளதா என கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, மணப்பாறை தி.மு.க.நகர செயலாளர் கீதா மைக்கேல்ராஜ், ஒன்றிய பெருந்தலைவர்கள். மணப்பாறை: அமிர்தவள்ளி ராமசாமி. மருங்காபுரி : பழனியாண்டி, மற்றும் நகராட்சி, ஆணையர், உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.