அமைச்சர் நேரு தலைமையில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு

திருச்சியில், அமைச்சர் நேரு தலைமையில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2021-09-11 05:00 GMT

திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோட்டில் நடைபெற்ற இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியில், அமைச்சர் கே.என். நேரு பங்கேற்றார். 

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம், திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள திமுக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதை முன்னிட்டு இம்மானுவேல் சேகரனின் திருவுருவப் படத்திற்கு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில், திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் செளந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், கதிரவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News