திருச்சி பெண்கள் சிறையில், தூக்கமாத்திரை சாப்பிட்டு கைதி தற்கொலை முயற்சி

திருச்சி பெண்கள் மத்திய சிறையில் சத்யா என்ற பெண் கைதி தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

Update: 2021-08-02 07:00 GMT

பைல் படம்.

திருச்சி பெண்கள் மத்திய சிறையில் சத்யா என்ற பெண் கைதி தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை செய்ததில், சத்யா, சாந்தி மற்றும் ரோஸ்லின் என்ற பெண் கைதிகளோடு ஒரு சில தவறான செயல்களில் ஈடுபட்ட வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சத்யா மற்றும் சாந்தி இருவரும் தவறான சம்பவங்களில் ஈடுபட்டுவந்த நிலையில், தற்போது சத்தியா சாந்தியை விட்டுப்பிரிந்து ரோஸ்லினோடு தவறான செயலில் ஈடுபட்டுள்ளார்.

அதனால் சிறைக் காவலர்கள் 3 பேரையும் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். இதில் மனமுடைந்த சத்யா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து, சத்யாவை சிறை அதிகாரிகள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Tags:    

Similar News