கள்ளக்காதலி மற்றொரு கள்ளகாதலனுடன் உல்லாசம், இளைஞரின் வெறிச் செயல் திடுக், திடுக்
கள்ளக்காதலி மற்றொரு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதைப் பார்த்த இளைஞர் வெறித்தனமாக செய்த செயல் திடுக்கிட வைத்தது.;
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (60) இவர் மீன் பிடிக்கும் வேலை பார்த்து வருகிறார். இவரது மூன்றாவது மனைவி அஞ்சலி (25)
இந்த நிலையையில் பால்ராஜ் பங்காளியான பக்கத்துவீட்டை சேர்ந்த மலையாளம் (46) என்பவருக்கும் அஞ்சலிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த வேம்புராஜ் மகன் கிருஷ்ணமூர்த்தி (19) என்ற வாலிபருடனும் அஞ்சலிக்கு தகாத உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பால்ராஜ் மீன் பிடிப்பதற்காக சென்றுவிட்டார்.
இந்தநிலையில் மலையாளம் அஞ்சலியோடு உல்லாசமாக இருப்பதற்கு அஞ்சலியின் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார்.
அப்பொழுது அஞ்சலி ஏற்கனவே கிருஷ்ணமூர்த்தியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை பார்த்த மலையாளம் கத்தியை எடுத்து வந்து அஞ்சலி காதருகே வெட்டி உள்ளார். இதில் அஞ்சலிக்கு காதில் காயம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணமூர்த்தியையும் கத்தியில் தாக்கி உள்ளார். இதில் கிருஷ்ணமூர்த்தி கழுத்தில் காயம் ஏற்பட்டு உள்ளது.பின்னர் மலையாளம் நேராக கத்தியுடன் துவாக்குடி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.