திருச்சி மாவட்டத்தில் 11ம் தேதி 47 பேருக்கு கொரோனா, இருவர் இறப்பு
திருச்சி மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இருவர் இறந்தனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
திருச்சி மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 47 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 74 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இருவர் இறந்துள்ளனர். 622 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.