திருச்சி கோவில்கள் திறக்க மறுப்பு; வெளியே நின்று தரிசனம் செய்யும் மக்கள்
ஸ்ரீரங்கம் காவிரிக் கரையோரங்களில் ஆடி 18க்கு வழிபாடு செய்ய அனுமதி இல்லை என ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோயில், வயலூர் முருகன் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில், மலைக்கோட்டை வளாகத்தில் உள்ள கோவில்களில் வரும் 2 மற்றும் 3ம் தேதிகளில் மக்கள் வழிபடுவதற்கு அனுமதி இல்லை.
கொரோனா பரவல் காரணமாக, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரிக் கரையோரங்களில் ஆடி 18 முன்னிட்டு வழிபாடு செய்வதற்கும் கூடுவதற்கும் அனுமதி இல்லை எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார் .
இந்நிலையில் இன்று திருவானைக்கோவில் ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் கோவில்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆலயத்தின் வெளியே ஆவலுடன் இறைவனை வணங்கி செல்கின்றனர்.