பாரதிதாசன் பல்கலை.யில் தொழில், திறன் சார்ந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை

திறன் சார்ந்த படிப்புகளை விளங்குவதற்கு பல்கலைக்கழக மானியக்குழு உதவியுடன் உயர்கல்வி நிறுவனத்தில் செயல்படுத்தப்படும் ஒரு பிரத்யேக மையமாக தற்போது டி. டி. யு கௌசல் கேந்திரா மையம் செயல்பட ஆரம்பித்துள்ளது.;

Update: 2021-08-08 12:21 GMT

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொழில் மற்றும் திறன் சார்ந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் தொழில் மற்றும் திறன் சார்ந்த படிப்புகளில் ஆட்டோ மொபைல் டெக்னாலஜி, லார்ஜஸ்ட் அண்ட் சப்லி செயின் மேனேஜ்மெண்ட், என்செயின் மேனேஜ்மெண்ட் மின்னணு பழுதுபார்க்கும்  படிப்பு என மூன்று வெவ்வேறு துறைகள் சார்ந்த மூன்று வருட படிப்புகளை இம்மையம் நடத்தி வருகிறது.

இந்த படிப்புகளுக்கான பாடத்திட்டங்கள் 60% செய்முறைப் பயிற்சியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த நிறுவனங்கள் செய்முறைப் பயிற்சிகள் தரப்படுகின்றன. படிப்பில் மாணவர் தரம் உயர்ந்த பயிற்சி கூடங்கள் செய்முறைப் பயிற்சிகள், உடனடி வேலை வாய்ப்புக்கான அனைத்து பயிற்சிகளும் மிகக் குறைந்த கல்விக் கட்டணத்தில் கற்றுத்தரப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு http: //oms. bdu. ac. in/admission என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தகவல தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News