திருச்சி மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு தொற்று
திருச்சி மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு தொற்று உறுதியானது, 11 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்;
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 19 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உட்பட மாவட்டம் முழுவதும் 11 நபர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 நபர்களும் குணமடைந்தனர். மாவட்டத்தில் 144 நபர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
மக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். திருச்சி மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் சிவராசு அறிவுறுத்தியுள்ளார்.