திருச்சி : விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Update: 2021-02-01 05:33 GMT

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர்.

திருச்சி விமான நிலையத்திற்கு வழக்கம் போல, காலையில் வரும் விமானத்திற்காக, 200க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர். காலை விமான நிலையத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், விமான நிலையத்தில் வெடிகுண்டு போட போகிறேன் என்று மிரட்டல் விடுத்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த விமான நிலைய ஊழியர், சிஐஎஸ்எப் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.உடனடியாக, விமான நிலையத்தில் அலாரம் ஒலிக்க செய்த சிஐஎஸ்எப் போலீசார், பயணிகளை அவசர அவசரமாக அப்புறப்படுத்தினர். மேலும் விமான நிலையத்தில், மோப்பநாய் உதவியுடன் அங்குலம், அங்குலமாக சோதனை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News