லஞ்சத்தின் ரேட் கார்டு வெளியிட்ட கமல்ஹாசன் ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என உறுதி

Update: 2020-12-28 06:47 GMT

தமிழகத்தில் ஒவ்வொரு துறைக்குமான லஞ்ச விபர பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன் விரைவில் ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என உறுதி தெரிவித்தார்.

வரும் 2021ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை நேற்று திருச்சியில் துவக்கிய மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது பேசிய அவர் ,தமிழக அரசியலில் நாங்கள் மூன்றாவது அணியாக இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஊழல் இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது. தொட்டில்முதல் சுடுகாடு வரை தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் நீதி மையத்தின் சாதனைகள் நேர்மை ஒன்றுதான் என்றார்.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு,50 சதவீதம் வேண்டும். வீடு நன்றாக இருக்க பெண்கள் காரணம். நாடு நன்றாக இருக்க பெண்கள் தேவை. விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு பங்களிப்பு வேண்டும்.விவசாயத்திலும் பெண்கள் பங்களிப்பு வேண்டும்.பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம். மருத்துவமனைகளில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ₹ 300, ஆண் குழந்தைகளுக்கு ₹ 500 லஞ்சம். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்பது எங்கள் தேர்தல் வாக்குறுதி.

இரட்டை இலை சின்னத்திற்கு கெட்ட பெயர் விளைவிப்பது வேறு யாரும் அல்ல. முழுக்க முழுக்க இப்போது ஆட்சியில் இருப்பர்கள் தான். பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு பிறகு லஞ்சம் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன்,அடுத்ததாக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளிவரும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News