தமிழகஅரசின் பொங்கல் பரிசு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது :அன்பில் பொய்யாமொழி

.

Update: 2020-12-21 13:17 GMT

தமிழக அரசு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்குவது தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என திருச்சியில் திமுக எம்எல்ஏ., மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தி.மு.க வின் திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் சிந்தாமணி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.தி.மு.க மகளிரணி மாநில துணை செயலாளர் சல்மா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி நிர்வாகிகள்,தொண்டர்கள், தெற்கு மாவட்ட செயலாளரும் திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏ., மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகேஷ் பொய்யாமொழி,தி.மு.க தலைவர் ஒவ்வொரு முறையும் என்ன கூறுகிறாரோ அதை தான் தமிழக முதல்வர் செய்து வருகிறார். கொரோனா காரணமாக குடும்பத்திற்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என ஸ்டாலின் கூறினார்.அதை தான் பொங்கல் பரிசாக 2500 ரூபாயை தமிழக அரசு வழங்குகிறது.இந்த பரிசுத்தொகை தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள்.அவர்கள் இதையும் தேர்தலையும் பிரித்து பார்ப்பார்கள்.2019 ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் தமிழக அரசு வழங்கியது அதன் பின்பு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எப்படி வாக்களித்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் அதே போல தான் வரும் சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் வாக்களிப்பார்கள் என்றார்.

Tags:    

Similar News