காட்டு முயல் வேட்டையாடிய 7 பேருக்கு ரூ. 1.05 லட்சம் அபராதம்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முயல்களை வேட்டையாடிய 7 பேரிடம் ரூ. 1.05 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் செண்பகப்பிரியா உத்தரவின்பேரில், வனச்சரகர் விமல்குமார் தலைமையிலான வனத்துறையினர் ஸ்ரீவைகுண்டம் வனச்சரகத்திற்குட்பட்ட அடைக்கலாபுரம் மேய்ச்சல் பரப்பில் நேற்றிரவு ரோந்து மேற்கொண்டனர்.
அப்போது அடைக்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த 7 நபர்கள் காட்டு முயல்களை வேட்டையாடியது கண்டறியப்பட்டு 7 நபர்கள் மீதும் மாவட்ட வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி தலா 15,000- வீதம் 1.05 லட்சம் ரூபாய் இணக்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இனி இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கி அந்த 7 பேரும் விடுவிக்கப்பட்டனர்.