உடன்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல்: 6 பேர் கைது

உடன்குடியில் விற்பனைக்காக புகையிலை பொருட்களை கொண்டு வந்த 6 பேரை கைது செய்த போலீசார் 2 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-12-04 05:45 GMT

பைல் படம்

திருச்செந்தூர்- திருச்செந்தூர் ஏடிஎஸ்பி ஹர்ஷ் சிங் மேற்பார்வையில் குலசேகரபட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையற்கரசி தலைமையில் சப். இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், ஏட்டு சந்தனகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் உடன்குடி தேரியூர் அருகே உள்ள பள்ளியின் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ உட்பட 2 வாகனங்களை சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் பணக்குடி மாதாகோயில் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் ராஜாகனி(44), அதே ஊரை சேர்ந்த கோயில் விளை முருகன் மகன் இலங்காமணி(32), முப்பிடாதி மகன் மணிகண்டன்(32), லெப்பை குடியிருப்பை சேர்ந்த பெரியசாமி மகன் ஆல்பர்ட் ராஜன்(37) ஆகிய 4 பேரும் கூட்டாக சேர்ந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் நெல்லையிலிருந்து உடன்குடி தேரியூரை சேர்ந்த முருகன் மகன் சித்திரைசெல்வன்(30) மற்றும் அவரது சகோதரரான மோகன்ராஜ்(28) ஆகியோருக்கு சட்டவிரோத விற்பனைக்காக புகையிலை பொருட்களை கொண்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து தனிப்படையினர் 6 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரொக்க பணம் ரூ.22 ஆயிரம், மற்றம் ரூ.6 லட்சம் மதிப்பிலான 1100 கிலோ புகையிலைப் பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய டாட்டா ஏசி மற்றும் டாட்டா மேஜிக் ஆகிய 2 சரக்கு வாகனங்கள், 2 பைக் என மொத்தம் 4 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து குலசேகரபட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News