சாத்தான்குளம் அருகே குடிநீர் வழங்க கோரி பாெதுமக்கள் சாலை மறியல்

சாத்தான்குளம் அருகேயுள்ள தாமரைமொழி கிராமத்தில் குடிநீர் கேட்டு பாெதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-13 15:34 GMT

சாத்தான்குளம் அருகேயுள்ள தாமரைமொழி கிராமத்தில் குடிநீர் கேட்டு பாெதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாத்தான்குளம் அருகேயுள்ள தாமரைமொழி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 3 மாதமாக சரியாக குடிநீர் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக பஞ்சாயத்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென கூறப்படுகிறது. இதையடுத்து ஆழ்துளை கிணற்றை சீரமைத்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி தாமரைமொழி ஊராட்சியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட சுமார் 40 பேர் இன்று காலை திரண்டனர். பின்னர் அவர்கள் தாமரைமொழி-பூச்சிக்காடு செல்லும் சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் தட்டார்மடம் எஸ்.ஐ.கள் குரூஸ் மைக்கேல், நெல்சன் மற்றும் வருவாய் ஆய்வாளர் இசக்கியம்மாள். தாமரைமொழி ஊராட்சி தலைவர் சாந்தா, கிளர்க் ராமர் உள்ளிட்ட குழுவினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆழ்துளை கிணற்றை சீரமைத்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News