காவல்துறையினரின் ஊரடங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

ஊரடங்கு விழிப்புணர்வு

Update: 2021-05-09 21:15 GMT

திருச்செந்தூரில் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசு திங்கள்கிழமை (மே-10) முதல் வருகின்ற மே 24-ம் தேதி வரை முழுபொதுமுடக்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக மளிகை, காய்கனி, தேநீர் கடைகள் மதியம் 12 மணி வரையிலும், குறிப்பிட்ட நேரத்தில் உணவகங்கள் பார்சல் விநியோகம் செய்திடவும், மருந்தகங்கள், பால் விற்பனையகம் உள்ளிட்டவை இரவு வரை செயல்படவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தியும், முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பொருட்களை வாங்குவது குறித்தும், காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திருச்செந்தூரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். தாலுகா காவல் ஆய்வாளர் ம.ஞானசேகரன் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்துப் பேசினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News