திருச்செந்தூர் அரசு ஐடிஐயில் நேரடி சேர்க்கை: அக்.30 வரை நீட்டிப்பு
திருச்செந்தூர் அரசு ஐடிஐயில் நேரடி சேர்க்கையில் சேர்வதற்கு அக்.30 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) சேர நேரடி சேர்க்கையில் சேர்வதற்கு 30.10.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எஸ்.அருள் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்பட்டுவரும் திருச்செந்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) சேர நேரடி சேர்க்கையில் சேர்வதற்கு 30.10.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டின்படி, திருச்செந்தூர், ஐ.டி.ஐ-யில் சேர நேரடி சேர்க்கையில் சேர்வதற்கு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். திருச்செந்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் தச்சர் மற்றும் உலோகத்தகடு வேலையாள் தொழிற்பிரிவுகளில் இடம் உள்ளன. இவற்றிற்கான கல்வித்தகுதி, 8ஆம் வகுப்பு. எனவே ஐ.டி.ஐ பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் அனைத்து சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர வேண்டும்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசால் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750/- (வருகை நாட்களுக்கு ஏற்ப), கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், விலையில்லா சீருடை - இரண்டு செட், விலையில்லா காலணி - ஒருசெட் வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு திருச்செந்தூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்களை 04639-242253 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.