சாத்தான்குளத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
சாத்தான்குளம் அருகே சாலைபுதூரில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.;
கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ( கோப்பு படம் )
சாத்தான்குளம் அருகே சாலைபுதூரில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பேய்க்குளம், விராக்குளத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. தென்திருப்பேரை மருத்துவ அலுவலர் கல்யாணி தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதித்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
இதில் 81 பேர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இம்மானுவேல், விராக்குளம் இந்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மேரிஜார்சிஸ் சாந்தி, சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.