ஆறுமுகநேரி மகளிர் பள்ளியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு கருத்தரங்கம்

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2023-07-03 15:17 GMT

ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவி ஒருவருக்கு பிளாஸ்டிக் கூடை வழங்கப்பட்டது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தூய்மை இந்தியா திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு சம்பந்தமான தொடர் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஆறுமுகநேரியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வருகை தந்தவர்களை லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநர் பானுமதி வரவேற்றார்.

மதர் சோசியல் சர்வீஸ் ட்ரஸ்ட் இயக்குநர் கென்னடி நிகழ்ச்சிக்கு, தலைமை தாங்கினார். தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தென் மண்டல தலைவர் ராம்குமார், மண்டல செயலாளர் இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியின் துவக்கமாக தூய்மை இந்தியா விழிப்புணர்வு உறுதிமொழியை ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

அதனைத் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநிலத் தலைவருமான கென்னடி பள்ளிக்கு குப்பை போட பயன்படுத்தப்படும் கூடைகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.

மேலும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. முடிவில் ஆசிரியர் சீனிவாசவி கூறினார். இதில் பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News