திருச்செந்தூர் நகராட்சியை கைப்பற்றியது திமுக

திருச்செந்தூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 21 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது;

Update: 2022-02-22 06:00 GMT

திருச்செந்தூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 24 வார்டுகளிலும், அதிமுக 25 வார்டுகளிலும், காங்கிரஸ் 8 வார்டுகளிலும், பாஜ 17 வார்டுகளிலும், விசிக ஒரு வார்டிலும், நாம் தமிழர் 6 வார்டுகளிலும், அமமுக 22 வார்டுகளிலும், சமக 5 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், மநீம 3 வார்டுகளிலும் போட்டியிட்டது. இதில் திமுக 21 வார்டுகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையை பெற்றுள்ளது. அதிமுக 2 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து திருச்செந்தூர் நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

Tags:    

Similar News