திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா தொடக்கம்

Update: 2021-02-17 07:26 GMT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா இன்று (17 ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பின்னர் அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் மாசித்திருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

கோவில் நிர்வாகத்தின் மூலம் மாசித்திருவிழா நிகழ்ச்சிகளை காண வரும் மற்றும் கோவிலுக்கு சுவாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News