திருச்செந்தூர்: ஓ.பி.எஸ் மகன் ஜெய பிரதீப் சுவாமி தரிசனம்
மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைய வேண்டி கோயில்களில் வழிபாடு;
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டாவது மகன் ஜெய பிரதீப் நேற்று சுவாமி தரிசனம் செஞ்தார். அதன் பின்னர் , செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, 'தமிழகத்தில் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைய வேண்டி கோயில்களில் வழிபட்டு வருகிறேன். சென்னையில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு மலர் அலங்காரம் செய்வது என் கடமை. மனிதாபிமானம் அடிப்படையிலேயே சசிகலா உடல் நலம் பெற ட்விட்டரில் பதிவு செய்தேன்' என்று கூறிவிட்டு சென்றார்.