முருகனின் அறுபடைவீடுகளில் தைப்பூச விழா

Update: 2021-01-28 05:15 GMT

முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முருகப்பெருமானின் முக்கியமான விழாக்களில் ஒன்றான தைப்பூசம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பழனியில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அங்கு ஒரு நாளைக்கு 25000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. ரோந்து பணியில் 50க்கும் மேற்பட்ட சீருடை அணியாத காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கும் ஏராளமான பகுதியிலிருந்து மக்கள் குவிந்து வருகின்றனர். இன்று காலையில் தீர்த்தவாரி நடைபெற்றது. காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை அமைந்துள்ளது. இங்கு தைப்பூச விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிகர நிகழ்வான தைப்பூச விழாவையொட்டி இன்று காலை 6 மணிக்கு சத்திய ஞானசபையில் திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனர்.

Tags:    

Similar News