திருச்செந்தூரில் நாளை (ஜன. 28) நடைபெற உள்ள தைப்பூசத் திருவிழாவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் வந்த வண்ணம் உள்ளனா்.
தைப்பூசத் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு முருகப்பெருமானை வழிபடுவதற்காகவே திருச்செந்தூரில் தற்போது அதிகளவில் பக்தா்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா். மாலை அணிந்து, விரதமிருக்கும் பக்தா்கள் பக்தி பாடல்கள் பாடியும், வேல் குத்தி, காவடி எடுத்தும் வருகின்றனா்.இதில் குறிப்பாக இராமநாதபுரம், விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பக்தா்கள் அதிகளவில் வந்துள்ளதால் திருக்கோவில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொ) கல்யாணி, மற்றும் அலுவலக பணியாளா்கள் செய்துள்ளனா்.