கானம் பேரூராட்சியில் தலைவர், துணைத்தலைவர் தேர்வு

கானம் பேரூராட்சியில் திமுகவை சேர்ந்தவர்கள் தலைவர் மற்றும் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Update: 2022-03-05 02:30 GMT

கானம் பேரூராட்சியில் தலைவராக வெங்கடேஷ்வரியும், துணைத்தலைவராக அந்தோணி காட்வினும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கானம் டவுன் பஞ்.,சில் மொத்தம் உள்ள 12 வார்டில் 7 வார்டுகளில் திமுகவும், 4 வார்டுகளில் அதிமுகவும், ஒரு வார்டில் பாஜவும் வெற்றி பெற்றது. இதில் தலைவர் வேட்பாளராக 10வது வார்டு வெங்கடேஷ்வரியை திமுக தலைமைக்கழகம் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து நேற்று தலைவருக்கான தேர்தல் நடந்தது. இதில் திமுக கவுன்சிலர்கள் 7 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் 4 பேரும் கலந்து கொண்டனர். இதில் 1வது வார்டு பாஜ கவுன்சிலர் பூவதி அம்மாள் கலந்து கொள்ளவில்லை. தலைவருக்கான போட்டியில் திமுக வேட்பாளர் வெங்கடேஷ்வரியும், அதிமுக வேட்பாளராக 9வது வார்டு கவுன்சிலர் செந்தமிழ் சேகரும் போட்டியிட்டனர். இதில் திமுக கவுன்சிலர் வெங்கடேஷ்வரி 7 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு துணைத்தலைவருக்கான தேர்தல் நடந்தது. இதில் திமுக சார்பில் 4வது வார்டு கவுன்சிலர் அந்தோணி காட்வினும், அதிமுக வேட்பாளர் செந்தமிழ்சேகரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலிலும் பாஜ கவுன்சிலர் கலந்து கொள்ளவில்லை. இதில் அந்தோணி காட்வின் 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கடேஷ்வரிக்கும், துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற அந்தோணி காட்வினுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலரும், செயல் அலுவலருமான வேல்சாமி பதவி பிரமானம் செய்து வைத்தார். இதையடுத்து திமுகவினர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை குரும்பூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.


Tags:    

Similar News