Thoothukudi News Today-தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
தூத்துக்குடியில் மழை குறைந்து இருந்தாலும் வெள்ளம் வடியாததால் மீட்பு பணிகள் மெதுவாகவே நடந்து வருகின்றன.;
Thoothukudi News Today
தூத்துக்குடியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்னும் முழுமையாக வடியாமல் உள்ளது. வெள்ள பாதிப்புகள் தொடர்ந்து நீடுத்து வருவதால் நாளை செவ்வாய்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Thoothukudi News Today
கடந்த சில நாட்களாகவே தென் மாவட்டங்களில் பரவலாக பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் இந்த மழை தீவிரம் அடைந்து தொடர்மழை பெய்யத்துவங்கியது. இதனால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள்வேகமாக நிரம்பின.
மேலும் நீர்நிலைகளில் இருந்து வெளியேறிய உபரிநீர் ஊருக்குள் பாயத் தொடங்கியது. இதனால் இந்த மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கின்றன. மின்சாரம் மற்றும் போக்குவரத்தும் முற்றிலுமாக இல்லாமல் உள்ளது.
நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் படகுகள் மூலமாக கூட மக்களை மீட்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, கடற்படையின் ஹெலிகாப்டர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கிறது. ஆனால் தற்போது ஒன்றிரண்டு ஹெலிகாப்டர்கள் மட்டுமே மீட்பு பணியில் இருப்பதால் மீட்பு பணிகள் மெதுவாகவே நடப்பதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.
கூடுதல் ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
Thoothukudi News Today
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
இன்று தூத்துக்குடியில் மழை இல்லை என்றாலும் தேங்கி நின்ற வெள்ளம் இன்னும் வடியவில்லை. வெள்ளத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்திருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
மழை வெள்ளம், பல்வேறு இணைப்பு சாலைகளை துண்டித்திருப்பதால் மீட்புகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. வெள்ள நீரின் வேகம், நேற்றைவிட இன்று ஓரளவு குறைந்திருப்பதால் மீட்பு படையினர் படகுகள் மூலமாக மக்களை மீட்க போராடி வருகின்றனர். தற்போது வரை மீட்கப்பட்டிருப்பவர்கள் திருமண மண்டபங்களிலும், அரசு கட்டிடங்களிலும் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
Thoothukudi News Today
இந்நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. வெள்ள நீர் வடியாத நிலையில் பல பள்ளிகளில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. அதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.