தேவர் ஜெயந்தி குருபூஜை: விதிகளை மீறிய 1544 பேர் மீது வழக்கு; 33 பேர் கைது
தேவர் ஜெயந்தி குருபூஜையை முன்னிட்டு விதிகளை மீறிய 1544 பேர் மீது வழக்கு; 33 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மண்டல காவல் துறை ஐஜி., உத்தரவின் பேரில் தென் மாவட்டங்களில் கடந்த 30ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி குருபூஜையன்று சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 1,544 பேர் மீது இதுவரை 190 வழக்குகள் போடப்பட்டு, அதில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் காணொளி காட்சி மூலம் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்களைக் கண்டறிந்து, தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது.
கடந்த 4ம் தேதி தீபாவளி நாளன்று உச்ச நீதிமன்ற விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 233 வழக்குகள் போடப்பட்டு, 246 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மது போதையில் வாகனங்கள் ஓட்டியவர்கள் மீது 809 வழக்குகள் போடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.