கோவில்பட்டி கே.ஆர்.கலை அறிவியல் கல்லூரியில் பெண்கள் அமைப்பு கருத்தரங்கம்
கோவில்பட்டி கே.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு பெண்கள் அமைப்பு சார்பாக மாணவிகளுக்கு கருத்தரங்கம்.
கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு பெண்கள் அமைப்பு சார்பாக மாணவிகளுக்கு கருத்தரங்கம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞரும் முன்னாள் மாணவியுமான சவுந்தர்யா கலந்து கொண்டு " பெண்கள் சந்திக்கக் கூடிய பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
கல்லூரியின் நிர்வாக இயக்குநர் திரு கே.ஆர்.அருணாச்சலம் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் திரு. மதிவண்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார். ஆங்கிலத்துறை மூன்றாம் ஆண்டு மாணவி செல்வவட்சுமி வரவேற்புரை நிகழ்த்தினார். சுpறப்பு விருந்தினர் அவர்களை முதுகலை இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி ஏஞ்சல் அறிமுகப்படுத்தினார். கணிதத்துறை மூன்றாம் ஆண்டு மாணவி கன்யாஸ்ரீ நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை பெண்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை கீதாமணி தலைமையில் பெண்கள் அமைப்பு போராசிரியர்கள் செய்திருந்தனர். ஆங்கிலத்துறை மூன்றாம் ஆண்டு மாணவி பவித்திரா மற்றும் தீபிகா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.