கோவில்பட்டியில் பெண் வெட்டிக் கொலை: ஆட்டோ ஓட்டுநர் மீதும் தாக்குதல்

கோவில்பட்டி அருகே ஆட்டோவில் சென்ற பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆட்டோ ஓட்டுநரும் தாக்கப்பட்டார்.;

Update: 2023-04-10 05:30 GMT

கோவில்பட்டி அருகே கொலை நிகழ்ந்த இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 33). ஆட்டோ ஓட்டுநர். இந்த நிலையில், இன்று அதிகாலை சண்முகராஜ் தனது ஆட்டோவில் வானரமுட்டியில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை கட்டராங்குளத்திற்கு ஏற்றிச் சென்றுள்ளார்.

வானரமுட்டி - கட்டராங்குளம் இடையே காளம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஆட்டோவை வழிமறித்து உள்ளனர். பின்னர், அவர்கள் திடீரென ஆட்டோவில் இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டி உள்ளனர்.

அதனை தடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர் சண்முகராஜையும் அந்த கும்பல் தலையில் தாக்கிய உள்ளது. இதனால், அவர் மயக்கமடைந்து கீழே விழுந்து உள்ளார். இதையெடுத்து, அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனராம்.

மயக்கம் தெளிந்த பிறகு ஆட்டோ ஓட்டுநர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் சண்முகராஜை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டியதில் காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி நாலாட்டின்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஆட்டோவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெண் கட்டராங்குளத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி வெள்ளைத்துரைச்சி (30) என்பது தெரிய வந்துள்ளது.

கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்தும், கொலையாளிகள் குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீாசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News