வேற்றுமை உருவாக்கும் நோக்கில் சிலர் பிரசாரம் : வைகோ

Update: 2021-03-31 07:30 GMT

கோவில்பட்டியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர்ராஜூ கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்தார் எனவும் வேற்றுமையை தூண்டி பிரச்சாரத்தை சிலர் செய்வதாக மதிமுக பொது செயலாளர் வைகோ கூறினார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து கோவில்பட்டி இலக்குமி ஆலை மேம்பாலம் அருகே உள்ள அணுகுசாலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி பேசியதாவது, இங்கு போட்டியிடும் அமைச்சர் 10 ஆண்டுகளில் என்ன செய்துள்ளார். இப்போது ஆங்காங்கே விஷமத்தனமாக வேற்றுமை உணர்வுகளை உருவாக்கும் நோக்கத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அந்த பிரசாரம் எடுபடாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சீனிவாசன் பொதுமக்களுக்காக பாடுபடுகிறவர். இந்த அணி தான் வெற்றி பெறும். அதுபோல, திமுக கூட்டணி தான் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார். மேலும் திமுக கூட்டணி வெற்றால் என்னென்ன திட்டங்கள்,சலுகைகள் வழங்கப்படும் எனவும் அவர் பட்டியலிட்டார்.

தொடர்ந்து நாலாட்டின்புதூர், இடைசெவல், வில்லிசேரி ஆகிய இடங்களில் மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இதில், மதிமுக வடக்கு மாவட்டச் செயலர் ரமேஷ், இளைஞரணிச் செயலர் விநாயகா ஜி.ரமேஷ், ஒன்றியச் செயலர்கள் அழகர்சாமி, சரவணன், நகரச் செயலர் பால்ராஜ், திமுக நிர்வாகிகளான ராமானுஜகணேஷ், ரமேஷ், பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல், மார்க்சிஸ்ட் வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சௌந்தரராஜன் தலைமையில் தொழிற்சங்கத்தினர் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு, முடுக்கலாங்குளம், கிழவிப்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.

Tags:    

Similar News