நடிகர் விவேக் மறைவிற்கு அஞ்சலி

Update: 2021-04-18 05:00 GMT

நகைச்சுவை நடிகர் விவேக் சென்னையில் காலமானார். இதைத் தொடர்ந்து, கோவில்பட்டி ஜீவ அனுகிரகா பொதுநல அறக்கட்டளை மற்றும் பசுமை இயக்கம் சார்பில் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள ஜீவ அனுகிரகா பொதுநல அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த விவேக் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி, மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. விவேக் உருவப்படத்தைச் சுற்றிலும் அவர் பெரிதும் நேசித்த மரக்கன்றுகள் வைக்கப்பட்டிருந்தது.இந்நிகழ்வில், கோவில்பட்டி அரசு மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா மருத்துவர் திருமுருகன், மருத்துவர் ராமையா, ஜீவ அனுகிரகா பொதுநல அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன், த.மா.கா., நகரத் தலைவர் ராஜகோபால், சமூக ஆர்வலர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News