கோவில்பட்டி அருகே கண்மாயில் கோவில் கலசம் வீசி செல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ளது நாலாட்டின்புதூர். இந்த கிராமத்தில் உள்ள சாலைகுளம் கண்மாயின் ஒரு பகுதியில் சுமார் 2 அடி உயரமுள்ள கோவில் கலசம் ஒரு நீண்ட கம்புடன் இணைக்கப்பட்ட நிலையில் அதன் அடிப்பகுதியில் கல் கட்டப்பட்டு கிடந்துள்ளது. அப்பகுதியில் விவசாய நிலத்திற்கு சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.மேலும் இது குறித்து விஏஓ., மற்றும் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று தண்ணீரில் கிடந்த கலசத்தினை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.