பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது.
மாணவிகளுக்கு தொந்தரவு கோவில்பட்டியில் தலைமையாசிரியர் போக்சோவில் கைது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள சின்னகொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தாமஸ் சாமுவேல் (57). இவர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் 8 பேருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பத்மாவதி வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் தலைமையாசிரியர் தாமஸ் சாமுவேலை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்