கோவில்பட்டியில் தீயணைப்புத் துறை சார்பில் தன்னார்வ தொண்டர்களுக்கு ஒத்திகை பயிற்சி
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கோவில்பட்டியில் தீயணைப்புத் துறை சார்பில் தன்னார்வ தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.;
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கோவில்பட்டியில் தீயணைப்புத் துறை சார்பில் தன்னார்வ தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதையடுத்து வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் வகையில் தீயணைப்பு நிலையத்தில் தன்னார்வ தொண்டர்களுக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. மழை காலத்தில் நம்மையும், நமது உடைமைகளையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, வெள்ளம் ஏற்படும் போது செய்ய வேண்டியவை, ஆபத்தில் உள்ளவர்களை எவ்வாறு மீட்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் குளங்கள், ஊருணிகள், கிணறுகள், காட்டாற்று வெள்ளம் போன்றவைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக செயல்பட வேண்டும் என்றார் தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ்.