கோவில்பட்டியில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ,கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது

Update: 2021-09-20 18:15 GMT

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற மழைநீர்கால்வாய் தூர்வாரும் பணி

பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கமால் இருக்கும் வகையில், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்கள் தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

அதன்படி, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், மழைநீர் வடிகால்களை தூர் வார நகராட்சி இயக்குநர் உத்திரவின் பெயரில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் இன்று முதல் 25ந்  தேதி வரை நகர் பகுதியில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்கள், தூர் வாரும் பணிகள் நடைபெறுகிறது. 2 ஜேசிபி இயந்திரங்கள், 100 தூய்மைபணியாளர்கள் கொண்ட குழுவினர், இந்த மாபெரும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகளை மேற்கொள்கின்றனர்.

இதற்கான பணிகளை, நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி இன்று தொடங்கி வைத்தார். இன்று இளையரசனேந்தல் சாலை, நடராஜபுரம் தெரு, காந்தி நகர், பசும்பொன் நகர் பகுதியில் உள்ள மழை நீர் செல்லும் வடிகால்கள் தூர்வரப்பட்டு, சுத்தப்படுத்தபடுகிறது. தொடர்ந்து ஒரு வார காலம் நகரில் உள்ள, அனைத்து மழை நீர்வடிகால்களில் உள்ள குப்பைகள், செடிகள் ஆகியவை அகற்றப்பட்டு தூர்வாரப்பட உள்ளது. இதனால் மழைகாலத்தில் மழைநீர் குடியிருப்பு பகுதியில் தேங்கமால் மழைநீர் வடிகால்கள் வழியாக செல்வதற்கு பயன்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகராட்சி நிர்வாகத்துடன் நெடுஞ்சாலைத்துறையினரும் இந்த தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News