கோவில்பட்டியில் விநாயகர் கோயிலில் தேங்காய் உடைத்து நூதன போராட்டம்

Kovilpatti Vinayagar Temple-மகளிர் உரிமை தொகையை அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்க கோரி கோவில்பட்டி விநாயகர் கோயிலில் தேங்காய் விடலை போட்டு நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2023-07-13 13:18 GMT

கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டடத்தில் ஈடுபட்டனர்.

Kovilpatti Vinayagar Temple-தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவில்பட்டி நகர தலைவராக இருப்பவர் ராஜகோபால். இவர், கோவில்பட்டி பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து பல ஆண்டுகளாக நூதன வகையிலான போராட்டங்களை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், மகளிர் உரிமைத் திட்டத்தில் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ராஜகோபால் தலைமையில் கோவில்பட்டியில் விநாயகர் கோயிலுக்கு தேங்காய் விடலை போட்டு நூதனப் போராட்டம் நடைபெற்றது.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக தலைமையிலான தமிழக அரசு பல மாதங்கள் ஆனபோதும் மகளிர் உரிமை தொகை தொடர்பான அறிவிப்பை வெளியிடாமல் இருந்து வந்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

இந்நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் மகளிர் உரிமை தொகையை பெற தகுதியானவர்கள் யார்? பயன்பெற தகுதி இல்லாதவர்கள் யார்? வரையறைகள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வரையறைகள் தகுதிகள் அனைத்தும் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிக்கு எதிராக மக்களுக்கு ஏமாற்றத்தை தரும் வகையில் அமைந்துள்ளது எனவும், மக்களை ஏமாற்றாமல் மகளிர் உரிமை தொகையை அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள அருள்மிகு ஸ்ரீ ஜெய கணபதி திருக்கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் அக்கட்சியினர் தேங்காய் விடலை போட்டு கண்டன கோஷமிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News