கோவில்பட்டியில் காமராஜர் பிறந்தநாள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கோவில்பட்டியில் காமராஜர் பிறந்த நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-07-14 13:00 GMT

காமராஜர் பிறந்தநாள் விழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி சார்பில் 75 ஆவது தமிழ் மன்ற தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவின்போது, காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த கவிதை, கட்டுரை, பேச்சு .விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காமராஜர் புத்தகமும் பரிசும் வழங்கப்பட்டது. மேலும், பிறந்தநாள் கொண்டாடிய மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி பாராட்டப்பட்டது.

நாடார் நடுநிலைப் பள்ளியில் நடந்த தமிழ் மன்ற கூட்டத்திற்கு பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலர் பத்மாவதி, ஐ.சி.எம். நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை ராதா,பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார்.

தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளர் மற்றும் தமிழ் செம்மல் விருதாளர் நெல்லை பொதிகை தமிழ் சங்க தலைவர் கவிஞர் பேரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பிறந்தநாள் கொண்டாடிய மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களையும் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில் பாடப்புத்தகத்தோடு மற்ற புத்தகங்களையும் படிப்பதற்கு மாணவர்கள் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காமராஜரின் முயற்சியினால் கல்வி அனைவருக்கும் கிடைத்துள்ளது.அவரது ஆட்சிக் காலத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. புத்தகங்களை வாசிப்பதன் மூலம் மாணவர்கள் படைப்பாளிகளாக உருவாகலாம்.

இங்குள்ள மாணவர்கள் படைப்புத் திறனை வளர்த்துக் கொள்வதற்கு நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கம் உதவியாக செயல்படும். மாணவர்கள் நாள்தோறும் நடக்கும் சிறுசிறு நிகழ்வுகளை குறித்துக் கொள்ள வேண்டும்.நூல்களை வாசிக்கையில் குறிப்புகளையும் எடுத்துக்கொண்டு அவைகளை வைத்துக்கொண்டு எழுத்துப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் அனைவரும் நூலகத்தை பயன்படுத்தி வாசிப்பை அதிகப்படுத்தி படைப்பாளிகளாக உருவாக வேண்டும் என குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி குழு உறுப்பினர் ராஜா அமரேந்திரன், ஆசிரியர்கள் அருள், காந்தராஜ், முத்துச்செல்வி, சங்கரேஸ்வரி, ஜெயலட்சுமி, சங்கரா கிட்ஸ் வித்யாலயா முதல்வர் மீனா,உள்பட பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ் ஆசிரியர் விஜய பொன் ராணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News