கோவில்பட்டி நகரில் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. அதை மீறி வாகனங்களில் சென்றவர்களுக்கு காவல் துறையினர் அபாரதம் விதித்தனர். பெரும்பாலான மக்கள் வீட்டில் முடங்கியுள்ள நிலையில் கோவில்பட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் காலை 6மணி முதல் மின்சாரம் தடைப்பட்டது. 8 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டதால் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
குறிப்பாக பேன், ஏர்கூலர், ஏசி போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் புழுக்கம் தாங்க முடியமால் பொது மக்கள் வீட்டு வாசலில் காற்றுக்காக அமர்ந்து இருக்க வேண்டி சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். முழு ஊரடங்கு என்று சொல்லியதால் வெளியேயும் செல்ல முடியமால், மின்சாரம் இல்லாத காரணத்தினால் வீட்டிற்குள்ளும் இருக்க முடியமால் வீட்டின் வாசலில் காத்து கடக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். முழு ஊரடங்கினை வரவேற்கிறோம் ஆனால் மின்சாரத் தடையில்லமால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் தெரிவித்துள்னனர்.
இது குறித்து மின்சார வாரிய அலுவலகத்தினை தொடர்பு கொண்டு கேட்ட போது துணை மின்நிலையத்தில் பழுது ஏற்பட்டதாகவும், பழுது நீக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியாக மின்சாரம் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.